Hesperian Health Guides

Coronavirus — COVID-19



COVID -19 என்பது என்ன?

COVID -19 என்பது மனிதர்களிடையே பரவும் கோரொனோ வைரஸின் வகைகளில் ஒன்று. இக்கிருமியை நாம் உருப்பெருக்கியால் மட்டுமே காண முடியும். உடல்நலக்குறைவை உண்டாக்கிப் பரப்பக்கூடிய கிருமி. COVID -19 ஃப்ளூவின் அறிகுறிகளான வறட்டு இருமல், மூச்சுத் திணறல், காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்றவற்றை உண்டாக்கும். COVID -19 பெரும்பாலும் சுவாசமண்டலத்தையே பாதிக்கும். பெரும்பாலான தொற்றுகள் ஆபத்தானவை அல்ல என்றாலும் சில சமயங்களில் நிமோனியா ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

கோரோனாவைரஸ் எவ்வாறு பரவுகிறது?

Corona color Page 1-1.png

கோரோனாவைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட மனிதர்களின் மூச்சுக்காற்று, இருமல், தும்மல் போன்றவற்றினால் சளி எச்சில் போன்ற திரவங்களின் திவலைகள் (droplets) வெளிவந்து உணவு அல்லது அவர்கள் தொடும் பொருட்களின் பரப்புகள்மீது படிவதால் வைரஸ் பரவுகிறது. வாய், மூக்கு, கண்கள் வழியாக வைரஸ் உடலில் நுழைகின்றது. நுழைந்ததுமே பெருகத்துவங்கி உடலின் மற்ற பகுதிகளூக்கும் பரவுகிறது. பெரும்பாலானவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்ட5 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் கோரோனா வைரஸ் வெளிப்படையான அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தாமல் 2 முதல் 14 நாட்கள் வரை உடலில் உயிர்வாழ முடியும். சில பேருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளே இல்லாமல் இருக்கலாம். அதனால் வைரஸ் தாக்கி இருப்பவர்கள் அது தங்களுக்கே தெரியாமல் மற்றவர்களிடம் பரப்புகிறார்கள். சில பொருட்கள் மீதும், சில பரப்புகள் மீதும் கொரோனா வைரஸ் 3 நாட்களோ அல்லது அதைவிடஅதிக கால அளவோ உயிர் வாழ முடியும். வைரஸ் உள்ளபரப்பை தொடும்போது அது பரவுகிறது.

கோரோனா வைரஸ் தொற்று யாருக்கு ஏற்படும்?

யாருக்கு வேண்டுமானாலும் கோரோனா தொற்று ஏற்படலாம். ஒரு முறை தொற்று உண்டாகி அதிலிருந்து மீண்டவருக்கும் மறுபடி உண்டாகலாம். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவர்கள், குறிப்பாக சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் நோயெதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கு கோரோனா தொற்று ஏற்படவும் பாதிப்புகள் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

நோய்த்தொற்றைத் தவிர்ப்பது எப்படி?

தற்சமயம் கோரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்தோ குறிப்பிட்ட மருந்துகளோ இல்லை. ஆன்டிபயாடிக்குகளாலோ வீட்டு மருந்துகளாலோ கொரோனா வைரஸைக் கொல்ல இயலாது. தொடுவதைத் தவிர்ப்பது மற்றும் அடிக்கடி சுத்தம் செய்து கிருமிகளைக் கொல்வதன் மூலம் தொற்றைத் தடுக்க மட்டுமே இயலும்

  • சோப் மற்றும் தண்ணீரால் அல்லது ஆல்கஹால் கொண்ட சானிடைசரால் அடிக்கடி கைகளைக் கழுவிக்கொள்ளவும்.
    • நகங்கள், உள்ளங்கை, மணிக்கட்டு, முன்கை முழுவதும் நன்கு சோப் தேய்த்து குழாய்த் தண்ணீரில் 20 நொடிகளுக்கு அழுத்தமாகத் தேய்த்துக் கழுவவும்.
    • கழிவறைக்குச் சென்று வந்தபின்னும் உணவருந்தும் முன்பும் இருமல், தும்மல், மூக்கு சிந்துதலுக்குப் பிறகும் தவறாமல் கைகளைக் கழுவவும். வெளியிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகும் கைகளை கழுவவும்.
    • கைகளைக் கழுவாமல் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
  • கவுன்டர்கள், கதவுக் கைப்பிடிகள் போன்ற பலர் கைபடும் பரப்புகளை ஆல்கஹால் அல்லது ப்ளீச் உபயோகித்துத் தூய்மைப்படுத்தவும்.
    • 70% அடர்த்தியுள்ள ஐஸோப்ரொபைல் ஆல்கஹால் கொரோனா வைரஸை விரைவாகக் கொல்லும். கவுன்டர்களின் மேற்பரப்புகள், கதவுக் கைப்பிடிகள், சாதனங்கள் போன்றவற்றைத் தூய்மை செய்ய அதை உபயோகிக்கவும். 60% முதல் 70% அடர்த்தியுள்ள கரைசல் நன்கு வேலை செய்யும். ஆனால் 100% அடர்த்தியுள்ள ஆல்கஹால் பயன்படாது. 100% ஆல்கஹால் என்றால் அதில் 2 கப் ஆல்கஹாலுக்கு ஒரு கப் தண்ணீர் என்ற விகித்த்தில் அதை நீர்க்கச் செய்யவும். முதலில் சோப் மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்தபின் ஆல்கஹால் கரைசலால் சுத்தம் செய்தபின் காற்றில் உலர விடவும்
    • ப்ளீச் சாதாரணமாக 5% கரைசலாக கிடைக்கும். அதனுடன் தண்ணீர் சேர்த்து நீர்க்க செய்யவும்.( குளிர்ந்த தண்ணீர் மட்டுமே உபயோகிக்கவும்). தரை மற்றும் பரந்த வெளிகளை சுத்தம்செய்ய 500 மில்லி ப்ளீச்சை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். சிறிய அளவுகளில் தேவைப்படும்போது 3 டேபிள்ஸ்பூன் ப்ளீச்சை ஒருலிட்டர் தண்ணீரில் கலந்து கொண்டு உபயோகிக்கவும்.
  • அடிக்கடி தொடும் பொருட்களைத் தொற்று நீக்கிகளால் (Disinfectant) சுத்தம் செய்யவும்.
  • துணிகளை டிடர்ஜென்ட் மற்றும் வெந்நீரால் துவைக்கவும். உங்கள் வாஷிங் மிஷினில் ப்ரீ ரின்ஸ் சைக்கிள் இருந்தால் அதை அவசியம் உபயோகிக்கவும். கைகளால் துவைக்கும் போது, முதலில்சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம்செய்யவும். பின்னர் ப்ளீச் கொண்டு சுத்தம்செய்யவும்.
  • முகமூடிகள் பற்றி: நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் உங்களிடமிருந்து கிருமிகள் பரவாமலிருக்க அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் முகமூடிகளை அணியவும். நீங்கள் நோய்த்தொற்றுஇருப்பவரை கவனித்துக் கொள்வதாக இருந்தால் N95 முகமூடியை உபயோகிக்கவும். N95 முகமூடிகள் அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் முகமூடிகளை விடஅதிக பாதுக்காப்பு அளிக்கும். முகமூடியை சரியாக உபயோகிக்க:
    • முகமூடியை உபயோகிக்கும் முன் உங்கள் கைகளை ஆல்கஹால் சானிடைசர் அல்லது சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவும்.வாயையும் மூக்கையும் நன்கு மூடிக்கொள்ளவும். முகத்துக்கும் முகமூடிக்கும் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்
    • முகமூடி அணிந்திருக்கும்போது அதைத் தொடக்கூடாது. முகமூடி நனைந்துவிட்டால் வேறொன்றை அணியவும்
    • முகமூடியைக் கழற்ற தலையின் பின்புறமுள்ள எலாஸ்டிக் பேண்ட் பகுதியைத் தொட்டுக் கழற்றவும். முன் பகுதியைத் தொடக்கூடாது. கழற்றியபின் உடனடியாக அதை மூடிய குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுக் கைகளைக் கழுவிக்கொள்ளவும்.
    • முகமூடிகளை மறுமுறை பயன்படுத்த வேண்டாம். தவிர்க்க முடியாதகாரணங்களால் N95 முகமூடியை திரும்ப உபயயோகப் படுத்த நேர்ந்தால் அவனில் வைத்து 160 டிகிரி F, அதாவது 72 டிகிரி C ல் 30 நிமிடங்கள் சூடு படித்து கொள்ளவும். உங்களிடத்தில் 5 N95 முகமூடிகள் இருந்தால் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிளாஸ்டிக் உறைகளில் போட்டுவைத்து, ஒவ்வொருமுகமூடியையும் disinfect செய்து 5 நாள்வரை உபயோகிக்கவும்
    • நோய்த்தொற்று உள்ளவர்களுடன் நெருங்கி பழகவேண்டி வரும்போது முகக்கவசங்களையே அணியவும். முகமூடிக்கு பதில் துணி உபயோகிக்க்க்கூடாது. துணி மூச்சுக்காற்றால் ஈரமாகி தொற்று உண்டாக்கும் திவலைகள் (droplets) வெளியிலிருந்து உங்களை நெருங்க வாய்ப்பாகும்
  • மற்றவர்களைப் பாதுகாக்க முகக்கவசம் அணியவும்: அனைவரும் முகக்கவசம் அணியும்போது, நாம் அறியாமலேயே நமக்கு கிருமித்தொற்று ஏற்படும்போது ஒருவரிடம்இருந்துஒருவருக்கு இத்தொற்று பரவுவதைத் தவிர்க்க முடியும். தடுப்பூசி இல்லாத நிலையில் முகக்கவசம் அணிவதே இத்தொற்று பரவுவதைத் தடுக்கும்வழியாகும். முகக்கவசம் அணிந்துஇருந்தாலும் நாம் அடுத்தவரிடம் இருந்து 6 அடி இடைவெளி தூரம் விட்டு இருத்தலையும், கைகளை அடிக்கடி கழுவுவதையும் நிறுத்தக் கூடாது ஏனென்றால் நம்முகக்கவசம் மற்றவர்களுக்குதான் பாதுகாப்பு.
  • உங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணித்துக்கொள்ளவும். தும்மல், வறட்டு இருமல், மூச்சுத் திணறல், காய்ச்சல் இவை இருந்தால் சிகிச்சை பற்றிய ஆலோசனைக்கு மருத்துவர் அல்லது சுகாதார அலுவலர்களை அணுகவும். ஏனெனில் COVID-19 இன் தீவிர அபாயம் மூச்சுவிட இயலாதிருப்பது. (Acute Respiratory Distress Syndrome – ARDS) இதற்கான தீவிர நிலை சிகிச்சை என்பது ஆக்ஸிஜன் அளிப்பதும் வென்டிலேட்டரில் வைத்திருப்பதும். இந்த சிகிச்சைகள் மருந்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும்.
    • This page was updated:05 ஜன 2024
"http://fr.hesperian.org/w/index.php?title=Coronavirus&oldid=102" இருந்து மீள்விக்கப்பட்டது